சாலை விபத்தில் மூதாட்டி மரணம் – Dinaseithigal

சாலை விபத்தில் மூதாட்டி மரணம்

தாரமங்கலம் அருகிலுள்ள அழகுசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி ராஜாமணி (55), கயிறு திரிக்கும் தொழிலாளி செய்து வந்த இவர் இரவு கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வந்துகொண்டிருந்தபோது சேலத்தில் இருந்து தாரமங்கலம் நோக்கி வந்த பெரியசோரகை சீரங்கனுர் பகுதியை சேர்ந்த தனசேகரன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் தூக்கி வீசப்பட்ட மூதாட்டி படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் மீட்டு மூதாட்டியை சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மூதாட்டி இறந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *