குடிப்பழக்கத்தை நிறுத்த சொன்ன தாய் : மகன் தூக்கிட்டு தற்கொலை – Dinaseithigal

குடிப்பழக்கத்தை நிறுத்த சொன்ன தாய் : மகன் தூக்கிட்டு தற்கொலை

தஞ்சை மானம்புசாவடி விஜயமண்டப தெருவை சேர்ந்தவர் ராமு (23 ). சமையல் தொழிலாளியான இவர் குடிப்பழக்கத்திற்கு அடிரைமயாக இருந்ததாக கூறப்படுகிறது இதனால் குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டு ஒழுங்காக வேலைக்கு செல் என கூறி பெற்றோர் கண்டித்துள்ளனர்.

இதில் மனம் உடைந்த ராமு வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ராமுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *