மேலப்பாளையம் சாலையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் சாலை மறியல் – Dinaseithigal

மேலப்பாளையம் சாலையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் சாலை மறியல்

தமிழகம் முழுவதும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அலுவலகம் மற்றும் மாநில நிர்வாகிகள் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதனை கண்டித்து திருப்பூர் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் மாவட்ட தலைவர் ஹபீபூர் ரஹ்மான் தலைமையில் காங்கயம் சாலையில் உள்ள சி.டி.சி. டிப்போ அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொடர்ந்து நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் சாலையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் என்.ஐ.ஏ. சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். இதனைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 8 பெண்கள் உள்பட 30 பேரை போலீசார் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *