உத்தரபிரதேசத்தில் கனமழைக்கு 10 பேர் பலி – Dinaseithigal

உத்தரபிரதேசத்தில் கனமழைக்கு 10 பேர் பலி

உத்தரபிரதேச மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அலிகாரில் உள்ள பள்ளிகள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. மாநிலத்தில் கனமழை மற்றும் மின்னல் காரணமாக சுவர்கள் மற்றும் வீடுகள் இடிந்து விழுந்த சம்பவங்களில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 11 பேர் காயமடைந்தனர். இந்திய வானிலை ஆய்வு மையத்தின்படி, மேற்கு உத்தரபிரதேசத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று காலை முதல் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. வியாழக்கிழமை காலை 8.30 மணி வரையான 24 மணித்தியாலங்களில் 140 மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளதாக எட்டாவா அவதான நிலையம் தெரிவித்துள்ளது. ஆக்ராவிலும் மழை பெய்துள்ளது. அலிகாரில், கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கனமழையால், நகரின் தாழ்வான பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களில் தண்ணீர் தேங்கி, மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு சனிக்கிழமை வரை விடுமுறை அளிக்க மாவட்ட ஆட்சியர் இந்தர் வீர் சிங் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *