முக்கிய பகுதியில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக புகார் – Dinaseithigal

முக்கிய பகுதியில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக புகார்

இலங்கையில் யாழ் மாவட்டத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள்பயன்பாட்டால் ஏற்படும் உயிரிழப்பு தொடர்பிலும் அதனை கையாள்வது தொடர்பிலும் ஆலோசனை கூட்டமொன்று சமீபத்தில் யாழ்ப்பாண போதனா மருத்துவமனையில் நடைபெற்றுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகாரசபை உத்தியோகத்தர்கள், மருத்துவர்கள், சிறைச்சாலை அதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் பங்கேற்று கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *