பெண்களை சட்டவிரோத தொழிலில் ஈடுபடுத்துவதாக கிளம்பிய புகாரில் விரைந்து நடவடிக்கைக்கு உத்தரவு – Dinaseithigal

பெண்களை சட்டவிரோத தொழிலில் ஈடுபடுத்துவதாக கிளம்பிய புகாரில் விரைந்து நடவடிக்கைக்கு உத்தரவு

இலங்கையில் பெண்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் நபர்கள் தொடர்பான விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவுக்கு ஏற்ப , இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை கண்டறிய விசாரணைக்குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர்கள், தூதரக பிரிவின் அதிகாரிகள், வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகள், குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளை அடையாளம் கண்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்வதே இதன் குறிக்கோள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *