சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உடந்தையாக இருந்த தாய் மற்றும் காதலி – Dinaseithigal

சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உடந்தையாக இருந்த தாய் மற்றும் காதலி

இலங்கையில் தனது காதலியின் மகளான ஏழு வயதுச் சிறுமியைப் படுகொலை செய்த சந்தேகத்தின் பேரில் தேடப்பட்டு வந்த கசிப்பு வியாபாரியை பொலிஸார் மற்றும் அதிரடிப்படை அதிகாரிகள் கலவான நகரில் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் தனது மனைவி மற்றும் இரண்டு காதலிகளுடன் ஒரே வீட்டில் குடித்தனம் நடத்தி வந்த சந்தேகநபர் ஒரு வாரத்துக்கு முன் தன் காதலி ஒருவரின் மகளான ஏழு வயது சிறுமியை அடித்துப் படுகொலை செய்துள்ளார். இதனையடுத்து பொலிஸில் குற்றஞ்சாட்டப்பட்டு தேடப்பட்டு வந்த நிலையில் சந்தேகநபர் கலவான பிரதேசத்தில் மறைந்திருக்கின்றார் என்று கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் மற்றும் பொலிஸ் அதிரடிப்படை குழுக்களால் நேற்று முன்தினம் மாலை கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நபர் தனது காதலியின் ஏழு வயது மகளை அடித்துப்படுகொலை செய்தார் எனவும், இதற்கு இந்த சிறுமியின் தாயான காதலியும் சந்தேகநபரின் இன்னொரு காதலியும் உடந்தையாக இருந்துள்ளனர் எனவும் தொடக்க கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. மேலும், கொலையுண்ட சிறுமியை இரத்தினக்கல் தோண்டப்பட்ட குழியில் உறையொன்றில் போட்டு அந்த நபர் புதைத்தார் எனவும் விசாரணைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . இந்த சம்பவத்தில் தனது மகளின் கொலைக்கு குற்றவாளி நபரான காதலனுக்கு உடந்தையாக இருந்த தாய் தனது மகள் காணாமல் போனார் என்று காவல் நிலையத்தில் பொய் புகார் ஒன்றைப் பதிவு செய்யதுள்ளார். அப்போது பொலிஸாருக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் இந்தக் கொலைச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *