பள்ளி மாணவர்களை இலக்கு வைத்து நடைபெற்ற பாலியல் தொழில் … இரண்டு பெண்கள் கைது – Dinaseithigal

பள்ளி மாணவர்களை இலக்கு வைத்து நடைபெற்ற பாலியல் தொழில் … இரண்டு பெண்கள் கைது

இலங்கையில் நுகேகொடையில் உள்ள வீடமைப்பு தொகுதி ஒன்றில் பள்ளி மாணவர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்டு வந்த பாலியல் தொழில் விடுதி ஒன்றை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர். நேற்று முன்தினம் விடுதியை முற்றுகையிட்டு அங்கு இருந்த இரண்டு பெண்களை கைது செய்துள்ளதாகவும் பாலியல் சம்பந்தப்பட்ட சில பொருட்களை கைப்பற்றியுள்ளதாகவும் நுகேகொடை குற்ற விசாரணைப் பிரிவினர் தகவல் கூறியுள்ளனர். இணையத்தளத்தில் விளம்பரங்களை வெளியிட்டு, சூம் ஆப் மூலமாக பள்ளிகளில் சாதாரண தரம் மற்றும் உயர் தரம் படிக்கும் மாணவர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்டு வந்ததாக கண்டறியப்பட்டுள்ளது . அதேசமயம் , இந்த விளம்பரங்களை பார்த்து நுகேகொடை மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களை சேர்ந்த பள்ளி மாணவர்கள் இந்த பெண்களை அணுகியுள்ளதாக விசாரணைகளில் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள பெண்கள் மினுவாங்கொடை மற்றும் மத்துகமை பிரதேசங்களை சேர்ந்த 45 மற்றும் 43 வயதானவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதில் இந்த பெண்கள் மிக பல காலமாக மிகவும் சூட்சுமமான முறையில் பொலிசாரின் கண்களில் சிக்காது குறித்த இடத்தில் பாலியல் தொழில் விடுதியை நடத்தி வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *