முக்கிய பிரதேசத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் பாலியல் துஸ்பிரயோக சம்பவங்கள் – Dinaseithigal

முக்கிய பிரதேசத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் பாலியல் துஸ்பிரயோக சம்பவங்கள்

இலங்கையில் யாழ் நகரில் உள்ள கோட்டை பகுதியில் தொடர்ச்சியாக பல சிறுமிகள் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கபடுவதாக யாழ். மாவட்ட செயலக கூட்டத்தில் குற்றசாட்டு தெரிவிக்கப்பட்டது. இது குறித்து மேலும் கூட்டத்தில் கூறுகையில், முனியப்பர் ஆலயத்திற்கு பின்பாகவும் கோட்டைக்கு வெளிப்புறத்திலும் உள்ள பகுதிகளிலும் பல பள்ளி சிறுமிகள் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படுகின்றனர். இதில் காதலர்கள் என்ற போர்வையில் அங்கு அழைத்து வரப்படும் சிறுமிகள் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாகின்றனர். அதேசமயம் , பண்ணைப் பாலத்தின் கீழ் பகுதியிலும் இது போன்று சிறுமிகள் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கபடுகின்றனர். மேலும் கடந்த சில மாதங்களாக அங்கு இந்த சிறுமிகள் பாலியல் துஸ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *